டிசிஎஸ் பணி சேர்க்கை டிஜிட்டல் மயமானது!

இதன் மூலம் தரமான, திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்வதை அது உறுதி செய்துள்ளது.
இதற்காக 450 கல்வி நிறுவனங்களுடன் டிசிஎஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், டிசிஎஸ்ஸின் ஆன்லைன் வேலைவாய்ப்பு தளமான நெக்ஸ்ட்ஸ்டெப் தளத்தின் மூலமாகவே வேலைக்கு விண்ணப்பிப்பது, வேலைநியமன கடிதத்தைப் பெறுவது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளும்.
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகும் மாணவ, மாணவியர் இந்த இணையதளத்திற்குப் பரிந்துரைக்கப்படுவர். மாணவ, மாணவியர் தங்களது பெயர் விவரங்களை நெக்ஸ்ட்ஸ்டெப் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கு மீண்டும் கல்வித்தகுதி உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும். பின்னர் அவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
இதற்காகவே டச்ஸ்டோன் என்ற பெயரிலான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, பேச்சுத்திறமை உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும்.
அடுத்து இன்டர்வியூ. அது மட்டுமே நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்துமே ஆன்லைன்தான். ஆனால் நேர்முகத்தேர்வையும் கூட கம்ப்யூட்டர் மூலமாகவே நடத்துவார்களாம்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நெக்ஸ்ட்ஸ்டெப்பே உங்களுக்கு வேலை நியமன கடிதத்தையும் அனுப்பி வைக்கும். அதை தங்களது மொபைல் போன் ஆப் மூலமாக டவுன்லோட் செய்து கொ்ண்டு வேலைக்குப் போய்ச் சேர வேண்டியதுதான். மொபைல் ஆப் மூலமாகவே ஜாயினிங் லெட்டரையும் அனுப்பி வைக்கலாம்.
மொத்தத்தில் ஆளெடுப்பை முழுமையான டிஜிட்டல்மயமாக்கி விட்டது டிசிஎஸ்.
இதுபோல கம்யூன் என்ற தளத்தையும் வைத்துள்ளது டிசிஎஸ். இதில் கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவ, மாணவியர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இது ஒரு விவாத மேடை போல. இது மாணவ, மாணவியர் படிக்கும்போதே தங்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும் பிளாட்பார்ம்போல அமைந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications