நகரங்களில் மட்டுமல்ல, கிராம பஞ்சாயத்துகள் தேர்தலிலும் தெலுங்கு தேசம் அபார வெற்றி
ஹைதராபாத்: சீமாந்திராவில் நடந்த நகராட்சி தேர்தல்களில் பெருவாரியாக வெற்றிபெற்ற தெலுங்கு தேசம் தற்போது கிராம பஞ்சாயத்து தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் தெலுங்கானா, சீமாந்திரா என வரும் ஜூன் 2ம்தேதி பிரிக்கப்பட உள்ளது. முன்னதாகவே அங்கு பிராந்தியவாரியாக நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன. இங்கு நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் இப்போது வெளியாக தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு நகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக கூட்டணியிலுள்ள சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் அதிக நகராட்சிகளை கைப்பற்றியது.
கடந்த மாதம் நடந்த ஜில்லா பரிசத், மண்டல் பரிசத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. ரிசல்ட் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சீமாந்திரா பகுதியிலுள்ள 13 மாவட்டங்களில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளை தெலுங்கு தேசம் கைப்பற்றியுள்ளது. 4 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. போட்டியிட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் காங்கிரஸ் தோல்வியே அடைந்தது.
அதே நேரம் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 3 மாவட்ட பஞ்சாயத்துகளையும், காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் தலா 1 மாவட்ட பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியுள்ளன. சீமாந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தெலுங்கு தேசத்துக்கு சரிசமமாக ஆதரவு உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் பெருமிதம் தெரிவித்ததுடன், இம்முடிவுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்று கூறினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications