9ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியார்: அடித்து நொறுக்கிய மக்கள்
விசாகபட்டினம்: ஆந்திராவில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியாரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கஞ்சரபாலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு வாத்தியாராக பணிபுரிபவர் ஏ. பாஸ்கர் ராவ்(33). அவர் தனது பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த சில வாரங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாணவி பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் பாஸ்கர் ராவின் சில்மிஷங்கள் பற்றி தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் பெற்றோரோடு சேர்ந்து உள்ளூர் மக்கள் வந்து பாஸ்கர் ராவை பிடித்து அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
மாணவியின் தாய் பாஸ்கர் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாஸ்கரை கைது செய்தனர். பொதுமக்கள் அடித்ததில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications