"டீச்சர்.. என்ன கொடுமை இது".. அவங்களுக்கு 27 வயசு.. மாணவனுக்கு 17.. ரெண்டு பேரும் ஜூட்..!
பள்ளி மாணவனுடன் ஓடிய டீச்சர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
சண்டிகர்: பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தினம் தினம் புகார்கள் வரும்நிலையில், ஒரு ஸ்கூல் டீச்சர், பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.. டீச்சருக்கு வயசு 27 ஆகிறது.. பையனுக்கு வயது 17..!
கடந்த சில தினங்களாகவே பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகள் அதிகரித்து இதுபோன்ற செக்ஸ் டார்ச்சர்கள் நடந்தால், பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து வெளியே சொல்ல மாட்டார்கள்.. படிப்பு, எதிர்காலம் கருதி இந்த மாணவிகளின் பெற்றோர்களும் வாய் திறப்பதில்லை.
ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.. துணிந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்லி வருகின்றனர்.. இதற்காக சோஷியல் மீடியாவையும் மாணவிகள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.. இந்த புகார்களின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளும் பாய்கின்றன.

ஹரியானா
இந்த சமயத்தில் ஒரு ஆசிரியையே, தன்னிடம் படித்த மாணவனுடன் தவறாக நடந்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த பள்ளி அது.. இங்குதான் அந்த டீச்சர் வேலை பார்த்து வருகிறார்.. 27 வயதான இவர், தன்னுடைய வீட்டில் டியூஷனும் எடுத்து வந்துள்ளார்... இவரிடம் பள்ளியில் 11-ம்வகுப்பு மாணவன் படித்து வந்துள்ளார்.. இவரே டீச்சரிடம் வீட்டில் டியூஷனும் சென்றுள்ளார்.

டியூஷன்
கடந்த 27ம் தேதி மதியம் 2 மணிக்கு டியூஷன் போன மாணவன், வீட்டிற்கு திரும்பவில்லை.. இதனால் பதறிபோன பெற்றோர், டியூஷன் டீச்சர் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்... ஆனால் டீச்சர் வீட்டில் இல்லை.. அவரது பெற்றோர்தான் இருந்தனர்.. இவர்களிடம் கேட்டதற்கு, மகளை பற்றி எதுவுமே சொல்லவில்லை.. நீண்ட நேரம் வலியுறுத்தி கேட்டபிறகே, டீச்சர் மாணவனுடன் வீட்டை விட்டு ஓடிப்போனதை சொல்லி உள்ளனர்.. இதைக்கேட்டு மாணவன் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தந்தனர்.

செல்போன்
இதையடுத்து, போலீசாரும் இந்த இவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.. வீட்டில் இருந்து ஓடிப்போய்ட்டாலும், நகை, பணம் எதையும் எடுத்து செல்லவில்லையாம்.. டீச்சர் கையில் ஒரே ஒரு மோதிரம் மட்டும் போட்டிருந்தாராம்.. 2 பேரின் செல்போன் சிக்னலை வைத்து அவர்களை பிடிக்க முயற்சித்தனர்.. ஆனால் 2 பேருமே செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்திருந்தனர்.. இதனால் எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்... இப்போதைக்கு மைனர் சிறுவனை கடத்தியதாக ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

ஹைலைட்
இந்த டியூஷனில் மாணவன் சேர்ந்து 2 மாசம்தான் ஆகிறதாம்.. இப்போது லாக்டவுனில் ஸ்கூல்கள் மூடிவிடவும், வீட்டிலேயே டியூஷன் நடந்துள்ளது.. இந்த மாணவனுக்கு மட்டும் டீச்சர் 4 மணி நேரம் டியூஷன் எடுத்தாராம்.. இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், டீச்சருக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சாம்.. டைவர்ஸும் ஆயிடுச்சாம்..!












Click it and Unblock the Notifications