பெங்களூரில் ஆபீஸின் 8வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரில் பணியாற்றி வந்த 33 வயது சாப்ட்வேர் என்ஜினியர் அலுவலக கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்ஷன் சோப்ரா(33). அவர் தென்கிழக்கு பெங்களூரில் உள்ள பெல்லந்தூரில் இருக்கும் ஜென்பேக்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார். ஹெஸ்.எஸ்.ஆர். லேவுட்டில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த அவருக்கு கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Techie jumps to death from 8th floor of office in Bengaluru

வரும் நவம்பர் மாதம் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் ஒரு வாரம் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை பணிக்கு திரும்பினார்.

வழக்கமாக அவர் நள்ளிரவு வரை அலுவலகத்தில் இருப்பார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு கழிவறைக்கு சென்ற அவர் பால்கனிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+