Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படி கூட சாவு வருமா..! ஒரே நொடியில் பறிபோன உயிர்.. இந்திய வீரர் பயிற்சியின் போது உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகர் சண்டிகரில் இந்தியக் கூடைப்பந்து அணிக்குத் தேர்வாகி இருந்த வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கூடைப்பந்து பயிற்சி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக அவர் மீது அந்த கம்பம் விழுந்துள்ளது. ஒட்டுமொத்த கம்பத்தின் எடையும் அவரது மார்பில் இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவில் அதிக விளையாட்டு வீரர்களைக் கொண்ட மாநிலங்கள் ஹரியானாவும் பஞ்சாப்பும் தான். பல்வேறு விளையாட்டுகளிலும் இந்த இரு மாநிலங்களில் இருந்து பல வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே அங்கு தேசிய அணிக்குத் தேர்வாகி இருந்த வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Teen Basketball Player Hardik Dies in Rohtak Court Accident Pole Falls on Chest During Practice

பரிதாபமாக உயிரிழப்பு

ஹரியானாவில் ரோதக் என்ற பகுதியில் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தில் 16 வயதான தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் உயிரிழந்தார். கூடைப்பந்து பயிற்சியின்போது அந்த கம்பம் அவரது மார்பில் விழுந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லக்கன் மஜ்ராவில் உள்ள மைதானத்தில் ஹார்திக் நேற்று பயிற்சி செய்துகொண்டிருந்தார். அங்கிருந்த பேஸ்கட் பால் கம்பம் சரியாகப் பொருத்தப்படாமல் இருந்துள்ளது. அவர் பயிற்சி எடுக்கும்போது திடீரென அந்த கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. இதைப் பார்த்தவுடன் அருகே இருந்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

என்ன நடந்தது

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் ஹார்திக் மைதானத்தில் அவர் பயிற்சி செய்கிறார். அப்போது ஓடி வந்து கூடைப்பந்து போலில் எகிறிக் குதித்து ஷூட் செய்வது போல பயிற்சி செய்கிறார். கூடைப்பந்து வீரர்கள் வழக்கமாக இதுபோன்ற பயிற்சிகளைச் செய்வார்கள். ஹார்திக் முதலில் இதைச் செய்யும்போது எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. இருப்பினும், இரண்டாவது முறையாக அதைச் செய்தபோது எதிர்பாராத விதமாகக் கூடைப்பந்துக் கம்பம் அப்படியே சாய்ந்து அவர் மீது விழுந்தது. அதன் முழு எடையும் அவரது மார்பின் மீது இறங்கியது.

Teen Basketball Player Hardik Dies in Rohtak Court Accident Pole Falls on Chest During Practice

இந்திய வீரர்

அருகிலிருந்த நண்பர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ஓடிவந்து கம்பத்தை அகற்றி ஹார்திக்கை மீட்டனர். இருப்பினும், அதற்குள் 16 வயதுடைய ஹார்திக் பரிதாபமாக உயிரிழந்தார். ஹார்திக் சமீபத்தில் தான் இந்தியக் கூடைப்பந்து தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் பயிற்சி முகாமையும் முடித்துவிட்டுத் திரும்பியிருந்தார். இந்தச் சூழலில் தான் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹார்திக் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதல்முறை இல்லை

அதேநேரம் இதுபோன்ற சம்பவம் அங்கு நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயதான அமன் என்பவர் இதேபோல பயிற்சி செய்தபோது கூடைப்பந்து கம்பம் அவர் மீது விழுந்தது. அமனுக்கு உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அங்கு தொடர்ச்சியாக இதுபோல இரு மரணங்கள் நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் உள்ள மைதானங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மற்றும் அதன் பராமரிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+