Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுவனைக் கொன்று, பிணத்துடன் உறவு கொண்ட 11ம் வகுப்பு மாணவன் கைது... கேரளாவில் பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, அவனது சடலத்துடன் ஓரினச் சேர்க்கை உறவு கொண்ட 11ம் வகுப்பு மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் சம்பவத்தன்று, பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துள்ளான்.

அப்போது அங்கு அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் ஜித்து என்கிற 9 வயது சிறுவன் வந்துள்ளான். சிறுவனைப் பார்த்ததும் 11ம் வகுப்பு மாணவருக்கு ஓரினச்சேர்க்கை ஆசை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட 11ம் வகுப்பு மாணவர் முயற்சித்துள்ளார்.

ஆனால், இதற்கு சிறுவன் சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த 11ம் வகுப்பு மாணவர், அங்கிருந்த காலி மதுபாட்டிலால் சிறுவனைத் தலையில் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அச்சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆனால், அதற்குப் பின்னரும் 11ம் வகுப்பு மாணவர் ஓயவில்லை. சிறுவனின் சடலத்துடன் அம்மாணவர் உறவு கொண்டுள்ளார்.

சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரணத்திற்குப் பின்னர் அச்சிறுவன் பாலியல் வன்முறைக்கு ஆளானதைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 11ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.

‘சிறுவன் இறந்து விட்டான் என்பதை 17 வயது மாணவன் நன்கு உணர்ந்து உள்ளார், அதற்குப் பிறகே அவர் உறவு கொண்டுள்ளார்' என விழிஞ்சம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 11ம் வகுப்பு மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன் இதே போன்ற குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓரினச்சேர்க்கைக்காக பள்ளி மாணவரை, சக மாணவரே கொலை செய்த சம்பவம், பெற்றோர் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+