அணையில் செல்ஃபி எடுக்கையில் நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி, காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வால்தேவி அணையில் செல்ஃபி எடுக்கையில் நீரில் தவறி விழுந்து 18 வயது வாலிபர் பலியானார். அவரை காப்பாற்ற நீரில் குதித்த நண்பரும் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் கோட்டி அருகே உள்ளது வால்தேவி அணை. நாசிக்கில் உள்ள சிட்கோ பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சவுரப் ஜெகன்னாத் சுல்பார்(18) மற்றும் அவரது நண்பர் அஜிங்கியா பாவ்சாஹெப் கெய்கர்(18) உள்பட 10 பேர் வால்தேவி அணைக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.

அணையில் நின்று சவுரப் செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுக்கையில் அவர் கால் தவறி அணையில் விழுந்தார். நண்பர் நீரில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜிங்கியா அவரை காப்பாற்ற நீரில் குதித்தார்.
ஆனால் சவுரப் மற்றும் அஜிங்கியா ஆகிய இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். உள்ளூர் மக்கள் மீனவர்களின் உதவியோடு அந்த இருவரின் உடலையும் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாசிக் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செல்ஃபி எடுக்கப் போய் இரண்டு வாலிபர்கள் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications