தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு... ஹைதராபாத்தில் நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம்..ஜெகன் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் நாளை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கிறார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அண்மையில் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் தெலுங்கானாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி பேரணிகளை நடத்தப் போவதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.
இதன் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் நாளை பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை அவரது கட்சியினர் செய்து வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications