போனில் 'போர்ன்' படங்களுக்கு அடிமையான மகன்... பாடம் புகட்ட தந்தை செய்த பதற வைக்கும் செயல்!
தெலுங்கானாவில் தன்னுடைய மகன் ஆபாசப் படங்களுக்கு அடிமையானதை கண்டித்து பார்த்த தந்தை ஆத்திரத்தில் மகனின் கையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத் : தெலுங்கானாவின் பஹடி ஷெரீப் பகுதியில் தனது மகன் ஆபாச படங்களுக்கு அடிமையானதை தொடர்ந்து கண்டித்து வந்த தந்தை, அப்போதும் மகன் திருந்தாததால் கசாப்பு கடை கத்தியை வைத்து அவனின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் பஹடி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த 45 வயது முகமது குய்யம் குரேஷி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய 19 வயது மகனின் வலது கையை வெட்டியதால் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
குரேஷி தன்னுடைய மகன் காலித்தின் கையை வெட்டுவதற்கான காரணம் என்ன தெரியுமா. 19 வயதே முன காலித் தன்னுடைய செல்போனில் எப்போது போர்ன் வீடியோக்களை பார்த்துக் கொண்டே இருப்பாராம்.

மகனை எச்சரித்த தந்தை
மகனின் இந்த அடிமைத்தனத்தை பல முறை தந்தை குரேஷி எச்சரித்துள்ளார். ஆனால் காலித் அதனை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனால் மகன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் குரேஷி.

தவறான நட்பால் வந்த பழக்கம்
காலித் தான் பணியாற்றும் கேபிள் ஆப்ரேட்டருடன் சேர்ந்து இது போன்று போர்ன் வீடியோக்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர் அந்தப் பகுதியில் துணை கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

துணிகர செயல்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குரேஷி கண்டித்ததற்கு காலித் தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் நேற்று இரவு காலித்தூங்கிக் கொண்டிருந்த போது அவனுடைய வலது கையை கசாப்பு கடை கத்தியை வைத்து வெட்டியுள்ளார் குரேஷி.

தந்தை கைது
கை மணிக்கட்டிற்கு மேல் பகுதியில் துண்டாக்கப்பட்டுள்ளதால் காலித்திற்கு மீண்டும் கை கிடைக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்த குற்றத்திற்காகவே குரேஷி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications