ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா போலீஸ் சம்மன் !! சந்திரசேகர் ராவ் மீது ஆந்திரா
ஆந்திரா : தெலுங்கானா மேலவைத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மேலவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பதற்காக நியமன உறுப்பினரான எல்விஸ் ஸ்டீபன்சன் என்பவருக்கு பணம் கொடுக்க முயன்றபோது, கையும் களவுமாக பிடிபட்ட சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கும் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஸ்டீபன்சனுடன் சந்திரபாபு நாயுடு பேசியதாக ஒரு தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
குற்றவியல் சட்டம் 41வது பிரிவின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த சம்மனின் படி, முதலமைச்சரை விசாரிக்க, மாநில ஆளுநரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்பதையும் தெலுங்கானா போலீசார் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனிடையே, தொலைபேசி உரையாடலில் உள்ள குரல் சந்திரபாபு நாயுடுவினுடையது என்பது உறுதியானால் அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர மாநில போலீசார் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநில எம்.எல்.ஏக்களின் தொலைபேசி உரையாடல்களை முறைகேடாக பதிவு செய்ததாகவும், சதி செய்ததாகவும், தவறான ஆவணங்களை வெளியிட்டதாகவும் அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications