ஓம் டிரம்ப்பாய நமஹ.. ஓம் டொனால்டாய நமஹ.. டெய்லி பாலாபிஷேகம் செய்யும் தெலுங்கானா கிருஷ்ணன்

டிரம்புக்கு சிலை வைத்து தினமும் வழிபட்டு வருகிறார் தெலுங்கானா இளைஞர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டொனால்ட் டிரம்புக்கு டெய்லி பாலாபிஷேகம் செய்யும் தெலுங்கானா கிருஷ்ணன்-வீடியோ

    தெலுங்கானா: பூஜை என்ன, வழிபாடு என்ன, அபிஷேகம் என்ன.. அப்படி ஒரு விசேஷம் தினமும் நடக்கிறது.. எந்த கடவுளுக்குன்னு கேட்காதீங்க.. யாருக்குன்னு கேளுங்க.. எல்லாம் நம்ம டொனால்ட் டிரம்புக்குதான்!

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்காரே.. அவர் என்ன செய்தாலும் அது ஏடாகூடத்தில்தான் போய் முடியும்.. வாயை திறந்தாலும் அது பஞ்சாயத்து வரை கொண்டு போய் விட்டுவிடும்.

    Telangana young man kept Statue for Donald-Trump

    அதனால்தானோ என்னவோ, அதிகமாக அவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நெட்டிசன்கள் வாரி வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் டிரம்ப்பை ரொம்பவே பிடித்துவிட்டது போலும். டிரம்ப்பின் கொள்கை இவரை ஈர்த்ததா? அல்லது டிரம்பின் சர்ச்சை பேச்சு இவரை இழுத்ததா? தெரியவில்லை. ஆனால் இவரை டிரம்பின் ரசிகர் என்று சொல்ல முடியாது.. பக்தர் என்பதுதான் சரி!

    ஆமாம்.. தெலுங்கானா மாநிலம் ஜனகாம்மா மாவட்டத்தில் பூஸ்ஸா கிருஷ்ணன் என்பவர்தான் அவர். ட்ரம்ப்புக்கு போன 14-ம் தேதி ஹேப்பி பர்த்டே. அதனால் கிருஷ்ணன் தன் வீட்டுக்கு முன்னாடி டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை வைத்துள்ளார். அந்த சிலைக்கு குண்டானில் லிட்டர் கணக்கில் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டார்.

    அன்று ஒருநாள் மட்டுமில்லை.. இப்படி தினமும் பூஜைகள் செய்து வருகிறார். இப்படித்தான் போன வருஷம், கிருஷ்ணா அவரது வீட்டில் டிரம்பின் உருவப்படத்தை வைத்து வழிபாடு நடத்தி அசத்தி இருக்கிறார். இருந்தாலும், எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற டிரம்புக்கு, இந்த இடத்துல சிலை வெச்சு பூஜையை ஏன் செய்யணும்?அந்த மாவட்ட மக்கள் எதுவுமே புரியாமல் இந்த கூத்தை பார்த்து செல்கின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+