அந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டேமுக்கு உள்ளே டான்ஸ்.. செத்து போன தினேஷ்.. வீடியோ!

    நிஜாமாபாத்: 'டேம்'க்கு உள்ளே டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞரை.. அப்படியே வெள்ளம் அடித்து கொண்டு சென்றுவிட்டது.

    நீதிமன்றம் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும், விவாதம் செய்து டிக் டாக் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு.. அதை இப்போது நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டனர்.

    இப்போது, இந்த டிக்டாக் மோகத்தினால் திறமைகள் வெளிப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், இதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு யாராலும் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.

    அணை

    அணை

    அப்படித்தான், தெலுங்கானாவில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது 2 நண்பர்களுடன், போன வெள்ளிக்கிழமை கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றார். பிறகு அந்த அணையிலேயே நண்பர்களுடன் சேர்ந்து குளித்து கொண்டிருந்தார்.

    வீடியோ

    வீடியோ

    குளித்து கொண்டிருந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, திடீரென டிக்டாக்கில் வீடியோ செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதற்கு தினேஷ் நான் டான்ஸ் ஆடுகிறேன், நீங்கள் வீடியோ எடுங்கள் என்று சொன்னார். அதன்படியே அணையில் தினேஷ் டான்ஸ் ஆட, நண்பர்கள் 2 பேரும் இதை வீடியோ எடுத்தனர்.

    வெள்ளப்பெருக்கு

    வெள்ளப்பெருக்கு

    இந்த நேரத்தில் திடீரென அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கவனிக்காத 3 பேரும் டிக் டாக் வீடியோ மோகத்தில் மூழ்கி இருந்தனர். அப்போது வந்த வெள்ளம் அவர்களை அப்படியே அள்ளிக்கொண்டு போனது.

    2 பேர்

    2 பேர்

    இதை பார்த்த, கரையோர பகுதி கிராம மக்கள் ஓடிவந்து அணைக்குள் குதித்து 3 பேரையும் மீட்ட முயன்றனர். ஆனால், 2 நண்பர்களையும் காப்பாற்றிவிட்ட நிலையில், தினேஷை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. ஏனென்றால், அவர்தான் தடுப்பணையின் நடுப்பகுதியில் நின்றுகொண்டு டான்ஸ் ஆடி கொண்டிருந்தார். அதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் முதலில் அடித்து கொண்டு போனது தினேஷ்தான்.

    வைரல் டான்ஸ்

    வைரல் டான்ஸ்

    இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து தினேஷை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 நாளாக கடுமையாக முயற்சி செய்து தேடி பார்த்து, கடைசியில் 3-வது நாளாக இன்று காலைதான் அவரது உடலை மீட்டனர். இறப்பதற்கு ஒருசில நிமிடங்களக்கு முன்பு தினேஷ் ஆடிய இந்த டான்ஸ்தான் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+