விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.
டெல்லி: சட்டவிரோத எக்சேஞ்ச் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி.க்கு பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாநிதி மாறன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அமைச்சர் என்ற முறையில் சேவை இணைப்புகள் பெற தயாநிதி மாறனுக்கு உரிமை இருந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் இணைப்புகள் பெற்றார். அவருக்கு முன்பிருந்த அமைச்சர்களும் சேவை இணைப்புகள் பெற்றுள்ளனர். இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் தயாநிதி தாக்கல் செய்துள்ள புதிய மனுவை படித்துப் பார்த்து பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.க்கு 2 வார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் விசாரணையை இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.
இன்றைய விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் முதலாவது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறனுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவருவதால் கைது செய்து கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.-ன் இந்த பிரமாண பத்திரம் மீது பதிலளிக்குமாறு தயாநிதி மாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications