தமிழக ஆளுநராக தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு நியமனம்?
முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான கிருஷ்ணம் ராஜு தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிந்து நீண்ட காலமாகியும் கூட இன்னும் புதிய ஆளுநரை நியமிக்காமல் உள்ளது மத்திய அரசு. தற்காலிக ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரான மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் புதிய ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரும், நடிகருமான, முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜுவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஆந்திர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்தவர் கிருஷ்ணம் ராஜு. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
அடுத்தடுத்து ஆந்திராவைச் சேர்ந்தவர்களையே குறி வைத்து தமிழக ஆளுநராக்குவது சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக கர்நாடக பாஜக தலைவரான சங்கரமூர்த்தி ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த நடிகரை ஆளுநராக்க பாஜக தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications