சாலையில் ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பேஸ்புக் மூலம் போலீசில் மாட்டவைத்த நடிகை!
ஹைதராபாத் : காரில் சென்ற போது ஈவ்டீசிங் செய்த இரண்டு இளைஞர்களை புகைப்படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் வெளியிட்டு அவர்களைப் போலீசில் சிக்க வைத்துள்ளார் தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி.
தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி. இவர் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் அஸ்மிதாவை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். அஸ்மிதாவின் காரை வழிமறிக்க முயன்று, தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

இளைஞர்களின் ஈவ்டீசிங்கை பொறுத்துக் கொண்டு காரை ஓட்டிச் சென்ற அஸ்மிதா, சாமர்த்தியமாக செயல்பட்டு, அந்த இருவரையும், அவர்கள் வந்த வண்டியின் பதிவு எண்களையும் தனது போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதை அனைவரையும் பகிர்ந்து, அந்த இருவரையும் பேஸ்புக்கில் பிரபலப்படுத்துங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்தார்கள்.

மேலும் போக்குவரத்து காவல்துறையின் பேஸ்புக் பக்கத்திற்கும் அஸ்மிதா இணைப்பு கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர், புகைப்படத்தில் இருந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து ஈவ்டீசிங் செய்த இரண்டு இளைஞர்களையும் அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அஸ்மிதாவின் சாமர்த்தியமான நடவடிக்கையால் ஈவ்டீசிங் செய்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக கைது செய்யப் பட்டுள்ளனர். அஸ்மிதாவின் தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications