தெலுங்கு தேச கட்சியில் மதிப்பில்லை… பாஜகவிற்கு போகும் நடிகர் சுமன்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியில் யாரும் தன்னை மதிக்கவில்லை என்பதால் பாஜகவிற்கு தாவ தயாராகிறார் வில்லன் நடிகர் சுமன். பாஜகவில் இருந்து அழைப்பு வந்தால் இணையதயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக இருக்கும் நடிகர் சுமன் தெலுங்கு தேசம் கட்சியில் தற்போதுஉறுப்பினராக உள்ளார்.

திருப்பதியில் நேற்று சுமன் சுப்ரபாத சேவையின்போது ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
தெலுங்கு தேசம் கட்சியில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். ஆனால் கட்சியில் எனக்கு மரியாதை இல்லை. என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
சந்திரபாபு நாயுடு 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நேரத்தில் கூட நான் கட்சியில் தொடர்ந்து நீடித்து வருகிறேன். சந்திரபாபு நாயுடு மீது நம்பிக்கை கொண்டு இருந்தேன். ஆனால் எனக்கு உரிய மரியாதை அளிக்காதது வேதனை அளிக்கிறது.
இனிமேல் நான் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு உள்ளேன். பிரதமர் மோடியின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது. அவரது திட்டங்கள் நாட்டுக்கு தேவையாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினர் அழைத்தால் அந்த கட்சியில் சேர தயாராக இருக்கிறேன். எனது அரசியல் வாழ்க்கை மூலம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ளது போல பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முன்னேற தனியாக சட்டம் கொண்டு வர முயற்சி செய்வேன் என்று நடிகர் சுமன் கூறினார்.
நான் 36 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 250க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளேன். இன்றும் நான் தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக உள்ளேன். ருத்ரமாதேவி படத்தில் வில்லனாக நடித்து உள்ளேன். நான் நடித்த சித்தி படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் நடிகர் சுமன் கூறினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications