காங்கிரஸூக்காக சச்சின் பிரசாரம்... ஆதாரமற்ற தகவல்: ராஜீவ் சுக்லா திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil

நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் வரும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக சமீபத்தில் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவை அனைத்தும் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார் பி.சி.சி.ஐ துணைத் தலைவரும், காங்கிரஸ் மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா. இது குறித்து நேற்று அவர் தெரிவித்ததாவது, ‘சச்சின் பரபரப்பாக கிரிக்கெட் ஆடி வருகிறார். தற்போது ரஞ்சி டிராபி ஆடி வரும் சச்சின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். அதனால் அவர் பிரசாரம் செய்வது குறித்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை' என்றார்.












Click it and Unblock the Notifications