தீவிரவாதி ஆனதன் பின்னணி... மூன்றரை மணி நேரம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பாகிஸ்தான் தீவிரவாதி
ஜம்மு : பாதுகாப்பு படை வீரர்களிடம் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி முகமது நவீத் தான் தீவிரவாதியானதன் பின்னணி, குடும்ப விவரம் குறித்து நீதிபதியிடம் சுமார் மூன்றரை மணி நேரம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.
காஷ்மீரில் உதம்பூரில் கடந்த 5-ந் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரின் வாகனங்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவரில் ஒருவன் உயிரோடு பிடிபட்டான். அவனது பெயர் முகம்மது நவீத் என்பதும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 15 நாட்கள் விசாரணை நடத்தினர்.
கடந்த 24-ந் தேதி முகமது நவீத், ஜம்மு தலைமை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றத்தில் தான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக அவன் உருது மொழியில் எழுதி கொடுத்தான். அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி முகமது நவீத் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகல் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். மாலை 4.30 மணி வரை அவன் மூன்றரை மணி நேரம் தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அவன் தனது குடும்ப பின்னணி, தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றது, தீவிரவாத தாக்குதல்களில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பங்கு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications