தீவிரவாதிகளின் ரகசிய 'கால்குலேட்டர் ஆப்'- ராணுவத்தின் விசாரணையில் அம்பலம்
டெல்லி: இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க கால்குலேட்டேர் என்னும் மொபைல் ஆப் ஒன்றை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை ராணுவ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கு இந்தியா ராணுவம் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காக தீவிரவாதிகள் ஸ்மார்ட் போனில் கால்குலேட்டர் ஆப் என்பதை நிறுவி தகவல்களை பறிமாற்றம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் நடமாட்டங்களை இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது. இதனிடையே, கண்காணிப்பில் சிக்காத வகையில் தீவிரவாதிகள் 'கால்குலேட்டர்' என்ற மொபைல் ஆப் பயன்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில், கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது, தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக கால்குலேட்டர் ஆப் உருவாக்கியுள்ளனர் என்பது குறித்து தெரியவந்தது.
இந்தச் செயலியின் மூலம், இணையதள வசதிகள் மற்றும் செல்லுலார் சிக்னல் இல்லாமலே தகவல்கள் பறிமாற்றம் செய்து வந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக குறுஞ் செய்திகள், தங்களது இருப்பிடங்கள் ஆகிவற்றை பறிமாறி வந்துள்ளனர்.
இதன் மூலம் எல்லைக்கு அப்பால் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு, நாச வேலைகளை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications