தீவிரவாதத்திற்கு மதங்கள் கிடையாது: ஆமிர்கான்
மும்பை: மதத்தின் பெயரால் தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்கும், மதத்துக்கும் தொடர்பில்லை என்று பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய ஆமிர்கான். மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல.

முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவம், சீக்கியம் என்று எந்த மதமாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்கும், அந்த மதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே கருதுகிறேன். மதத்துக்காகவே பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக தீவிரவாதிகள் கூறிக் கொண்டாலும், உண்மையில் அவர்களுக்கும் மதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மதம் நமக்கு அன்பை மட்டுமே போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. நான் சொல்ல விரும்பிய கருத்தை சொல்லி விட்டேன் என்றார் ஆமிர்கான்.
முன்னதாக இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதால், வேறு நாட்டுக்குப் போய்விடலாம் என தன் மனைவி சொன்னதாக நடிகர் ஆமிர்கான் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications