டெல்லி டூ காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானம் கடத்தப்படலாம்: உளவுத்துறை
டெல்லி: டெல்லியில் இருந்து காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானம் கடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் இருந்து காபூல் செல்லும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்படலாம் என்றும், அதிலும் குறிப்பாக ஏர் இந்தியா விமானம் கடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் முதல் பயணிகள் வரை அனைவரையும் தீவிர சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் அந்த விமான நிலையத்தில் சோதனைக்கு கூடுதல் நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள இடங்களில் ரோந்து செல்வார்கள். விமானத்தில் ஏதாவது பிரச்சனைக்குரிய, சந்தேக்கத்திற்குரிய பயணிகளை கண்டால் உடனே தகவல் கொடுக்குமாறு விமான ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தான் ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும் வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications