வயிற்றில் இரட்டை குழந்தை... கணவரின் பாசமில்லை: பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தானே: கர்ப்பமாக இருக்கும் தன்னிடம் கணவர் பாசமாக இல்லையே என்ற ஏக்கத்தில் ரயில்வே காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் நேற்று தானே ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
தானே ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாக பணிபுரிந்து வந்தவர் 29 வயது வைசாலி பிங்கட். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரயில்வே போலீஸ்காரரான விஜய் என்பவருடன் திருமணம் நடந்தது.
பொதுவாக இரவு பணி போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகளை மீண்டும் பொறுப்பாக வாங்கி வைப்பது வைசாலியின் வேலைகளில் ஒன்று. அதன்படி, நேற்று காலை 8.30 மணியளவில் துப்பாக்கிகளை வைக்கும் அறைக்குள் சென்ற வைசாலி கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.
வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தோழியான மற்றொரு பெண் போலீஸ், அறைக் கதவைத் தட்டியுள்ளார். உள்ளேயிருந்து எந்த பதிலும் வராததால், மற்ற போலீஸ்காரர்களின் உதவியோடு அந்த அறைக் கதவு உடைக்கப் பட்டிருக்கிறது.
அங்கே, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார் வைசாலி. அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. கையில் துப்பாக்கியையும் பிடித்திருந்தார். அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக வைசாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். அதனைத் தொடர்ந்து வைசாலி தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் நடத்திய சோதனையில் வைசாலி எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் வைசாலி, ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. நானே என் மரணத்தை தேடிக்கொண்டேன். என் வயிற்றில் இரட்டை குழந்தை வளர்ந்து வருகிறது. ஆனால் எனது கணவர் விஜய் என் மீது பாசம் இல்லாமல் இருப்பது எனது மனதை பாதித்துள்ளது' என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, வைசாலியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து வைசாலியின் கணவர் விஜயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications