குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கு தீர்ப்பு.. பாதிக்கப்பட்டாோர் ஏமாற்றம், அதிர்ச்சி

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடந்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இதை ஜாகியா ஏற்கவில்லை. விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் விசாரிக்க வேண்டு கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஜாகியா, அகமதாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்பதாக கூறி உத்தரவிட்டார்.
இதுகுறித்து மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோர் அதிர்ச்சியும், ஏமாற்றமும், அதிருப்தியும் வெளியிட்டனர்.
ரூபா மோடி என்பவர் கூறுகையில்,இது குல்பர்க் சொசைட்டி மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, 2002 மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் துயரமும் அடங்கியதாகும். ஜாகியா தன்னால் முடிந்தவரை போராடி விடடார். ஆனால் பலன் கிடைக்காதது வருத்தம் தருகிறது என்றார்.
சாய்ரா சிந்தி என்பவர் கூறுகையில், யாருமே எங்களது துயரத்தைக் கண்டுகொள்ளவில்லை.. நீதித்துறையைத்தான் நம்பியிருந்தோம். ஆனால் எங்களது மன உறுதியை குலைத்து விட்டது இந்தத் தீர்ப்பு. இருப்பினும் எங்களது கடைசி மூச்சு வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.
சலீம்சந்தி என்பவர் கூறுகையில், நிறைய சாட்சிகள் உள்ளன. நீதித்துறை மீ்ண்டும் அவற்றைப் பார்க்க வேண்டும், பரிசீலிக்க வேண்டும் அதிகாரப்பசி கொண்டோருக்கு நீதி கிடைத்து விடக் கூடாது என்றார்.
கஸம் மன்சூரி என்பவர் கருத்து தெரிவிக்கையில், ஒரே நிமிடத்தில்தீர்ப்பு வந்து எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. கலவரத்தில் நான் எனது குடும்பத்தினர் 10 பேரை இழந்து விட்டேன். நீதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்றார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications