24 ஆண்டுகளில் வேறு எந்த கட்சியும் செய்யாத பாஜகவின் விஸ்வரூப சாதனை இதுதான்!
கடந்த 24 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சி என்ற பெருமிதத்துடன் தற்போது இருக்கிறது பாஜக.
டெல்லி: நாடு முழுவதும் 1,382 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சியாக பாஜக விஸ்வரூபமெடுத்துள்ளது. 1993-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் முதல் முறையாக பாஜக மட்டுமே இவ்வளவு எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காட்சியாக வளர்ந்துள்ளது.
1990களுக்குப் பின்னர் பாஜக விஸ்வரூபமெடுத்து வளர்ந்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களின் பாஜகவின் தாமரை மலர்ந்துள்ளது.
அறுதிப் பெரும்பான்மை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை பாஜக. குதிரைப் பேரங்களை கையிலெடுத்து ஆட்சியை கைப்பற்றுவதையே பிரதான இலக்காக கொண்டு செயல்படுகிறது பாஜக.

சட்டசபை தேர்தல்கள்.....
அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக அறுதிப் பெரும்பான்மையை பெற்று அரியணை ஏறியது. ஆனால் மணிப்பூர், கோவா சட்டசபை தேர்தல்களில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாலும் உதிரிக் கட்சிகளின் துணை கொண்டு ஆட்சியை பிடித்துள்ளது.

1993-ல் 1501 எம்.எல்.ஏக்கள்
தற்போது நாடு முழுவதும் பாஜகவுக்குத்தான் மிக அதிகமான எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்ற பெருமை கிடைத்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 1501 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதன்பின்னர் ஆனால் நிலைமை தலைகீழாகிவிட்டது.

இன்று 813 தான்...
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வெறும் 813 எம்.எல்.ஏக்கள்தான் தற்போது உள்ளனர். பாஜகவைப் பொறுத்தவரையில் முதன் முதலாக 2014-ம் ஆண்டுதான் 1,000 எம்.எல்.ஏக்களைத் தாண்டியது.

2016,17-ல் ஏறுமுகம்
அதன்பின்னர் பீகார் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில் இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் 2016 மற்றும் 2017 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஏறுமுகம்தான்.

1,382 எம்.எல்.ஏக்கள்
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது 1,382 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். அதே நேரத்தில் நாட்டிலேயே ஒரு பாஜக எம்.எல்.ஏ. கூட இல்லாத மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது நமது தமிழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி












Click it and Unblock the Notifications