ஹிமாச்சல பிரதேசத்திலும் பாஜகதான் ஆட்சியமைக்கும்.. அடித்து சொல்லும் டைம்ஸ் நவ்
ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகதான் தனிப்பெரும்பான்மையை பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
Recommended Video

மும்பை ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகதான் தனிப்பெரும்பான்மையை பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு ஏற்கனவே சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில் குஜராத் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.
அதன்படி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் பாஜகவே வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக வெற்றி பெறும்
68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலில் 35 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கலாம். இந்நிலையில் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புப்படி ஹிமாச்சலில் பாஜக 41 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்க்கு 25 இடங்கள்
காங்கிரஸ் வெறும் 25 இடங்களை மட்டுமே பெறும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதரக்கட்சிகள் 2 இடங்களை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தோல்வி
ஹிமாச்சலில் கடந்த தேர்தலில் 36 சட்டசபை உறுப்பினர்களுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை காங்கிரஸ் 25 இடங்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குவங்கி உயர்வு
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு பாஜக 38.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இம்முறை ஹிமாச்சலில் பாஜகவின் வாக்கு வங்கி 9 சதவீதம் அதிகரித்து 47.6 சதவீதமாக இருக்கும் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குவங்கி சரிவு
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சரியும் என்றும் இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விட 11 இடங்கள் குறைவாகவே பெறும் என்றும் டைம்ஸ் நவ் எக்ஸிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications