சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல் களம்.. 31 வேட்பாளர்களை அறிவித்த காங்., ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்
சண்டிகர் : ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 31 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. குறிப்பாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹரியானா மாநில சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் ஹரியானா பாஜக தனித்துப் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன. இதேபோல ஜனநாயக ஜனதா கட்சி ஆசாத் சாமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தற்போதைய சூழலில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி காங்கிரஸின் 31 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக்கில் எடை பிரச்சனை காரணமாக வெளியேற்றப்பட்ட வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை அடுத்து காங்கிரஸ் சார்பில் அவர் ஜுலானா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சரான புபேந்தர் சிங் ஹூடா, கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வினேஷ் போகத்: ஒலிம்பிக் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய போகத், அனுமதிக்கப்பட்டதைவிட 100 கிராம் அதிக எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்க பதக்கம் பறிபோனது. இந்நிலையில் வினேஷை காங்கிரஸ் கட்சியில் இணைத்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹரியானா வந்திருந்த ராகுல் காந்தியை வினேஷ் போகத் சந்தித்தார். அதனை தொடர்ந்து இன்று அவர் காங்கிரஸில் இணைந்தார். இதனை உறுதி செய்யும் வகையில், ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார். இதனையடுத்தே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications