விடுதலைக்கு வழியில்லை.. பாரூக் அப்துல்லா தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், மூன்று முறை முதல்வராக பதவிவகித்தவருமான ஃபாரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே அவர் காவலில் இருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது முதல் ஃபாரூக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினரும், 3 முறை முதல்வருமான அப்துல்லா, தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தன்னை, அனுமதிக்கவில்லை என்று, அரசை ஃபாருக் அப்துல்லா விமர்சனம் செய்து கடிதம் எழுதியிருந்தார். இந்த ஒரு கடிதத்தை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் செய்தியாளர்களிடம் வழங்கினார்.
ஃபாருக் அப்துல்லா மீது Public Safety Act சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நபரை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை சிறைச்சாலைக்குள் விசாரணை இல்லாமல் வைத்திருக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications