கணக்கு காட்டாத சொத்து மதிப்பு 8.12% மட்டுமே என்பதால் ஜெ. விடுதலை: நீதிபதி குமாரசாமி
பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார். அவரது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் வருமாறு:
பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார். அவரது தீர்ப்பில் ஒரு முக்கியமான அம்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை கொண்டுதான், ஜெயலலிதா தரப்பை விடுதலை செய்துள்ளார் நீதிபதி குமாரசாமி.
அந்த முக்கிய அம்சம் வருமாறு:

66 கோடி சொத்து
சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு ரூ.66,44,73,573 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கட்டுமான வேலைகளுக்கான செலவு, ரூ.27,79,88,945 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி கணக்கில் இடிக்கிறது
அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில் ரூ.5 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 60 ரூபாய் குறைகிறது. இதை கழித்து பார்த்தால் உண்மையிலேயே கட்டுமானத்திற்கு, ரூ.22,69,34,855தான் ஆகியுள்ளது.

கல்யாண செலவு
திருமணத்திற்கான செலவு ரூ.6 கோடியே 45 லட்சத்து 4222 என்று அரசு தரப்பு கூறியிருந்தது. ஆனால், ரூ.28 லட்சத்து 68 ஆயிரத்துக்கு சான்று காண்பிக்க முடியவில்லை. எனவே இதை கழித்து பார்த்தால், திருமணத்திற்கான செலவு, ரூ.6,16,36,222 கோடியாகியுள்ளது.

கணக்கில் வராதது ரூ.2.82 கோடி
இவ்விரண்டு மாற்றப்பட்ட மதிப்பையும் சேர்த்து கூட்டினால், ரூ.28 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரத்து 107 வருகிறது. மொத்த சொத்து மதிப்பில் இருந்து இதை கழித்தால், எஞ்சுவது ரூ.37,59,02,466 ஆகும். குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 பணத்துக்கு, கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. கணக்கு காட்டாத தொகை ரூ.2,82,36,812 கோடியாகும்.

8.12 சதவீதம்
மொத்த வருவாயில், அவர் கணக்கு காட்டாத சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால், கிருஷ்ணானந்த் அக்னிஹோரி மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு இடையேயான வழக்கில், ஒருவருக்கு, 10 சதவீதம் வரை வருமானத்துக்கு மேல் சொத்து இருந்தால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திர அரசு வெளியிட்டிருந்த சுற்றரிக்கையில் கூட 20 சதவீதம் கூடுதல் சொத்துக்கள் இருப்பதில் தவறில்லை என்று உள்ளது.

ஜெ. விடுதலை
எனவே, ஏ 1 (ஜெயலலிதா) விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலை செய்யப்படுவதால், ஏ 4 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு குமாசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications