இந்திய ரயில்வேயின் பிறப்பு எப்போது தெரியுமா? ரயில்வே பட்ஜெட் நாளில் இதையெல்லாம் தெரிஞ்சுக்குங்க!
டெல்லி: இந்தியாவில் மோடி தலைமையிலான அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய ரயில்வே குறித்த சில சுவாரசியமான தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து ஏப்ரல் 16, 1853 ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் துவங்கப்பட்டது.
மும்பைக்கும், தானேவிற்கும் இடையில் இயக்கப்பட்ட இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுல்தான், சிந்த், சாகிப் என்ற மூன்று எஞ்சின்களும் 34 கிலோ மீட்டர் தூரத்தினை, 57 நிமிடங்களில் கடந்தன.

கிரேட் பெனின்சுலர் ரயில்வே:
இந்திய ரயில்வே அப்போது கிரேட் பெனின்சுலர் ரயில்வே என்று அழைக்கப்பட்டது. சிறிய மரக்குடில் ஒன்றே போர்பந்தரில் ரயில் நிலையமாக இருந்தது. இப்போது அதுவே ப்ரம்மாண்டமான சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகும்.

ரயில்வே பாலமும், மின்சார ரயிலும்:
முதல் ரயில்வே பாலம் 1854 ஆம் ஆண்டில் தானேயில் கட்டப்பட்டது.முதல் மின்சார ரயில் மும்பை வி. டி க்கும், குர்லாவிற்கும் இடையே 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடப்பட்டது.

மிக நீண்ட பிளாட்பார்ம்:
கரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரமே உலகத்தில் மிகவும் நீளமானது. இதன் நீளம் 833 மீட்டர்.

நீளளளமான ஸ்டேஷன் பெயர்:
ஸ்ரீ வெங்கடநரசிம்ம ராஜு வாரிப் பேட்டா என்ற ஸ்டேஷன் மிக நீளமான பெயருடையது.

குட்டி பெயருடைய “இப்” ஸ்டேஷன்:
மிகச் சுருக்கமான பெயருடைய ஸ்டேஷன் இப். இது ஒரிசாவில் இருக்கிறது.

மிகப்பெரிய ரயில்வே பாலம்:
மிகப்பெரிய ரயில்வே பாலம் கல்கத்தா - டெல்லி வழியில் உள்ள டெஹ்ரி-ஆந் சோனே பாலம். இது சோனி நதி மீது கட்டப்பட்டது இது 3064 மீட்டர் நீளமுடையது.

முதல் பெண் எஞ்சின் டிரைவர்:
முதல் பெண் எஞ்சின் ட்ரைவர் சுரேகா போன்ஸ்லே 1990 இல் மும்பையில் பணியில் சேர்ந்தார்.

பெரம்பூரில் ரயில்வே கோச்கள்:
இந்தியாவில் டீசல் எஞ்சின்கள் வாரணாசியிலும், மின்சார எஞ்சின்கள் சித்தரஞ்சனிலும் ரயில் கோச்கள் பெரம்பூர் ஐ.சி.எப். பிலும், பஞ்சாப் கபூர்தலாவிலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவிற்கு 5ம் இடம்:
மின்சார எஞ்சின் தயாரிப்பில் இந்தியா 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.நிர்வாக வசதிக்காக ரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கபட்டிருக்கிறது. 16,000 கி.மீ. அகலப்பாதை மின்சார மயமாக்கப்பட்டுளது.

உலகில் இரண்டாம் இடம் இந்தியாவிற்கு:
இருப்புப்பாதைகள் broad, metre, Narrow gauge என்ற மூன்று வகையில் அமைந்துள்ளன. இந்திய ரயில்வே ஆசியாவில் முதல் இடத்தையும், உலகத்திலேயே இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications