Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவன் கல்யாணை தேடிப் போய் பார்த்த முதல் பட ஹீரோயின்! மலரும் நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை அவரது முதல் பட நாயகி சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இவர்கள் முதன்முறையாக மீண்டும் சந்தித்துள்ள சுவாரஸ்யமான நிகழ்வு தெலுங்கு ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் வெற்றி நாயகனாக மாறி இருக்கிறார் பவன் கல்யாண். எந்த இடத்தில் அண்ணன் தோற்றாரோ, அதே இடத்தில் உறுதியாக நின்று தம்பி பவன் கல்யாண் சாதித்துக் காட்டி இருக்கிறார்.

Pawan Kalyan andhra pradesh assembly election 2024

தனது அரசியல் வெற்றியைப் பவன் கல்யாண் தனது 'தோலி பிரேமா' திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான 'அக்கடா அம்மாயி இக்கட அப்பா' படத்தின் மூலம் டோலிவுட்டில் நடிகராகக் காலடி எடுத்துவைத்தார் பவன். அவரை இந்தப் படம்தான் அறிமுகம் செய்தது.

1998 ஆம் ஆண்டு வெளியான 'தோலி பிரேமா' வெற்றிப் படமாக மாறும்வரை அவர் பல தோல்விகளைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனவேதான் தனது அரசியல் வெற்றியை ஒரு சினிமா பட வெற்றியுடன் ஒப்பிட்டு நினைவு கூறும் அளவுக்கு அந்தப் படம் ஒரு மைல் கல்லாக அவர் மனதில் அப்பெயர் பதிந்துபோய் இருந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய பவன், "பல வருடங்களாக வெற்றியை நான் பார்க்கவில்லை. கடந்த 2019 தேர்தலில் நான் தோல்வியடைந்தேன், எவ்வளவோ படங்கள் தயாரித்தாலும், நான் வெற்றி பெற்றதாக யாரும் என்னிடம் சொன்னதே இல்லை.

நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். எனது கட்சி கடந்த முறை ஒரே ஒரு இடத்தில்தான் வென்றது. இப்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதை இன்னும் என்னால் உணர முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு தோலி பிரேமா என்ற படத்தின் மூலம் முதல் வெற்றியைப் பார்த்தேன்" என்று கூறியிருந்தார்.

திரைப்படங்களில் தனது அதிரடியான கதாபாத்திரங்களுக்காக 'பவர் ஸ்டார்' என்று தனது ரசிகர்களால் அழைக்கப்பட்ட கல்யாண் 2014 இல் ஜனானாவைத் தொடங்கினார். ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில், பீமாவரம் மற்றும் கஜுவாகா சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு பவன் கல்யாண் தோல்வியடைந்தார். ஆகவே அவரது ஜேஎஸ்பி பலத்த பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் அவரது கட்சி பலகோல் என்ற ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற ஒருவரும் விரைவில் ஜெகன்மோகன் கட்சிக்குத் தாவினார்.
பவன் கல்யாண் 2022 ஆம் ஆண்டு, 'ஜன வாணி'யை தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டார். மனுக்களைப் பெற்றார். விடாமல் பொதுக் கூட்டங்களை நடத்தினார். அது தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது. இந்தத் தேர்தலில் சட்டசபையில் 21 இடங்களைக் கைப்பற்றிய பவன் கல்யாண் கட்சி 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்திலும் வென்றும் 100% வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Pawan Kalyan andhra pradesh assembly election 2024

அவரது கட்சி ஆந்திர அரசியலில் பலம் பொருந்தியதாக மாறி உள்ளதை உணர்ந்த முதல்வர் சந்திரபாபு நாடு, பவனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ளார். இந்நிலையில்தான் நேற்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் குழு ஒன்று பவன் கல்யாணைச் சந்தித்துள்ளனர். அந்தக்குழுவினர் 'கூடமி' எம்எல்ஏ ரகுராம கிருஷ்ண ராஜு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் துணை முதல்வரைப் பார்க்க பயணம் செய்துள்ளனர். அந்தக் குழுவில் அஸ்வினி தத், அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, மைத்ரி நவீன், விஸ்வ பிரசாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இது வழக்கமான சந்திப்புதான். ஆனால், அதற்குள் ஒரு சுவாரஸ்யமான செய்தி உள்ளது.

டோலிவுட் சினிமா உலகில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸும் ஒன்று. அதன் சார்பில், நாகார்ஜுனாவின் மருமகள் யர்லகட்டா சுப்ரியாவும் பவன் கல்யாணைச் சந்திக்கச் சென்ற சிறப்பு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அதில் என்ன சுவாரஸ்யம் என்று சிலர் கேட்கலாம்.

சுப்ரியா தனது திரை வாழ்க்கையை "அக்கடா அம்மாயி இக்கட அப்பா" படத்தின் மூலம் தான் தொடங்கினார். அவர் நடித்த ஒரே ஒரு படமும் இதுதான். அதில்தான் சஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இன்று அவர் துணை முதல்வர் அளவுக்கு உயர்ந்துள்ளார். இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யானை முதல் பட கதாநாயகியான இவர் சந்தித்துள்ளார். ஆனால், இது குறித்து பவன் தனது எக்ஸ் பக்கத்தில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் இது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+