கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் 2வது நாளாக ஐடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்து பராமரித்து வரும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
கர்நாடக மின் துறை அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான, டி.கே.சிவகுமாரின் வீடு, அலுவலகம் உட்பட, டெல்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள, 39 இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

பெங்களூருக்கு அருகே உள்ள ரெசார்ட்டில் தங்கியுள்ள, குஜராத்தைச் சேர்ந்த 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தேவையான வசதிகளை செய்துதருவதால் இந்த சோதனைகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக அரசு ஜனநாயகத்தை சீரழிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக சிவகுமார் வீடுகளில், அலுவலகங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications