For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன் எப்போதையும் விட, மதம், கொள்கைகளால் நம்மிடம் பிளவு அதிகரித்துள்ளது.. ரஞ்சன் கோகாய் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்- வீடியோ

    டெல்லி: அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தியுள்ளார்.

    The Indian Constitution is strong enough to hold the country together: Chief Justice of India Ranjan Gogoi

    தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற தீபக் மிஸ்ராவின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்றபோது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் கூறியதாவது:

    பிற காரணங்களை புறம் தள்ளிவிட்டு அரசியல் சாசன உரிமைகள் காக்கப்பட வேண்டியது அவசியம். இந்த முயற்சியில் நாம் தோற்றால், பிறர் மீது வெறுப்பை காட்டுவது, ஒருவருக்கொருவர் கொலை செய்வது போன்றவை தொடரும்.

    [ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை ]

    இந்த விஷயத்தில் நீதித்துறையும், பார் கவுன்சிலும் முன்னணியில் இருக்க வேண்டும்.
    அனேகமாக நாம் இப்போதுதான், ஜாதி, வகுப்பு, பாலியல், மதம், கொள்கைகள் அடிப்படையில் முன்பைவிட அதிகமாக பிளவுகளை பார்த்து வருகிறோம். நமக்கு அடையாளம் அளிக்கும் முயற்சி நடக்கிறது. நாம் எதை அணிய வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை பேச வேண்டும், படிக்க வேண்டும், எதை குடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படுகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், சிறு விஷயம் என்று கூட எதுவும் இல்லை.

    சில விஷயங்கள், நம்மை பிளவுபடுத்தி, வெறுப்பை விதைக்கின்றன. இந்த கேள்விகளுக்கு விடை காண, இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை எல்லோரும் கூர்ந்து பார்க்க வேண்டும். நமது தனிப்பட்ட நம்பிக்கைகளும், சுவைகளும் அரசியல் சாசன வழியில் மேம்படுத்திக்கொள்ளப்பட வேண்டும்.

    ஏதாவது ஒரு சந்தேகம் வந்தாலும், கருத்து வேறுபாடு வந்தாலும் அதை அனுமதிக்க வேண்டும். அதுதான், இந்திய அரசியல் சாசனத்திற்கு கொடுக்கும் மரியாதை.

    இந்திய அரசியல் சாசனம் என்பது, நன்கு செயல்படக்கூடியது, நெகிழும்தன்மை கொண்டது, நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையிலான பலம் கொண்டது. நீதியின் வாயிற்காப்பாளர்களாக செயல்படுவதுதான் நமது பணி.

    ஆதார், ஹோமோசெக்ஸ், தனியுரிமை, குழுவாக கொலை செய்யும் சம்பவங்கள், குடிமை உரிமைகள் பாதுகாப்பு விஷயங்களில் வழங்கிய தீர்ப்புக்காக தீபக் மிஸ்ரா நினைவில் வைக்கப்படுவார். இவ்வாறு ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

    English summary
    The Indian Constitution is “workable, flexible and strong enough to hold the country together. Both in peace times and war times,” he said, adding that “you and I must be the vanguard in this march and gatekeepers of justice” Says Chief Justice of India, Gogoi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X