நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

மதுரை: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என சபாநாயகருக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வரை அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் கருணாஸை டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன்பேரில் அந்த 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பயத்தால் 4 எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என்றும் தங்கதமிழ்செல்வன் எச்சரித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications