உயிர் இருக்கும் வரை கர்நாடகாவிற்காக உழைப்பேன்.. ராஜினாமாவிற்கு முன் எடியூரப்பா உருக்கம்!
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு எடியூரப்பா உரையாற்றி வருகிறார்.
Recommended Video

பெங்களூர்: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு எடியூரப்பா உரையாற்றி வருகிறார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டார் எடியூரப்பா. மீண்டும் தேர்தல் நடைபெறும்போது பாஜக 150 தொகுதிகளை வெல்லும் என எடியூரப்பா உருக்கம்.குடும்பத்தினரிடம் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் கர்நாடக சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூடியது. தற்போது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு எடியூரப்பா உரையாற்றி வருகிறார்.
தொடக்கத்தில் நம்பிக்கை கோரி தீர்மானத்தை முன்மொழிந்தார் எடியூரப்பா. அதன்பின் 19ம்தேதியான இன்று கீழ்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு பேச தொடங்கினார்.

என்னுடைய அமைச்சரவைக்கு அவை நம்பிக்கை வைத்துள்ளது என்றால் எனக்கு ஆதரவு அளியுங்கள்.40 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்த பாஜகவுக்கு 104 சீட்கள் கொடுத்தனர். காங்கிரஸ், மஜத கட்சிகள் முன்பைவிட குறைவான சீட்கள் வென்றுள்ளன. மக்கள் காங்கிரஸ், மஜதவை புறக்கணித்துள்ளனர்.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ்-மஜத இணைந்து ஆட்சியமைக்க முயற்சி-எடியூரப்பா.நாடு முழுக்க தனிப்பெரும் கட்சிக்குதான் ஆட்சியமைக்க அழைப்புவிடுக்கப்படுகிறது.நாம் அனைவரும் ஒன்றாக யோசிக்க வேண்டியுள்ளது, விவசாயிகள் பிரச்சினை பற்றி.எனது கடைசி உயிர் இருக்கும்வரை விவசாயிகள் நிம்மதியோடு இருக்க உழைப்பேன்.
நீர்பாசன திட்டங்களை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை.சுதந்திரம் பெற்ற இத்தனை வருடங்கள் பிறகும் சுத்த குடிநீர் தர முடியவில்லை.விவசாயிகள், தலித், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளனர். இத்தனை கஷ்டங்களுக்கு நடுவே தேர்தல் நடைபெற்றது.

போராட்டத்தின் மூலம் அரசியலில் உயர்ந்தவன் நான்.2 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு இருந்தபோது முதல் நான் உழைத்துக்கொண்டுள்ளேன்.அதிக இடங்கள் வெல்வது முக்கியம் அல்ல- மக்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.மாநிலம் முழுவதும் மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.நான் சந்தர்ப்பவாத அரசியலில் ஒருபோதும் ஈடுபட்டதே இல்லை- காங். ஆட்சியில் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு நியாயம் வேண்டும்.
காங். ஆட்சி நடத்தினாலும் கர்நாடகாவுக்கு மோடி அரசு நிறைய திட்டங்களை செய்துள்ளது.தலித், சிறுபான்மை மக்களுக்கு உதவி செய்வதுதான் என் நோக்கம்.கர்நாடகாவில் 6 நதிகளை இணைக்க வேண்டும் என்ற திட்டம் கிடப்பில் உள்ளது.113 தொகுதிகளை பாஜகவுக்கு மக்கள் கொடுத்திருந்தால் கர்நாடக மாநிலம் மாறியிருக்கும்.ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சி பாஜக.
எனது கடைசி மூச்சு இருக்கும்வரை பாஜகவுக்காக உழைப்பேன்.லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளையும் வென்று மோடிக்கு பரிசளிப்பேன்.இன்னும் 5 வருடம் அல்லது அதற்குள்ளாக தேர்தல் நடந்தால் 150 தொகுதிகளை பாஜக வெல்லும்.சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டார் எடியூரப்பா. மீண்டும் தேர்தல் நடைபெறும்போது பாஜக 150 தொகுதிகளை வெல்லும் என எடியூரப்பா உருக்கமாக பேசினார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications