கர்நாடக சட்டசபை நாளை காலை கூடும்.. ஆளுநர் அறிவிப்பு
கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்டுமாறு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்டுமாறு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்டுமாறு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை காலை நடக்கும் முதல் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு புதிய சபாநாயகர் எம்எல்ஏ பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்வு உணவு இடைவேளை வரை நடைபெறும். அதன்பின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இடைப்பட்ட நேரத்தில் எம்எல்ஏக்களுடன் மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசாத வகையில், டிஜிபி பாதுகாப்பு அளிக்கப்படும்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications