கர்நாடக சட்டசபை: கடைசி நேரத்தில் எடியூரப்பா மனமாற்றம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காமலே முடிந்தது
கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடியது.
Recommended Video

பெங்களூர்: உணவு இடைவேளை விடப்பட்டு இருந்த கர்நாடக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது. கர்நாடக சட்டசபையில் இதுவரை 193 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் அரை மணி நேரத்தில் 28 எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேணடும் என்ற நிலைமை இருந்த போது எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
இன்று பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் கர்நாடக சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த முதல் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு புதிய தற்காலிக சபாநாயகர் எம்எல்ஏ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் முதல் நபராக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எம்எல்ஏவாக பதவியேற்றார். வரிசையாக எம்எல்ஏக்கள் பதவியேற்றார்கள். இதில் பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் உள்ளிட்ட இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை.

கர்நாடக சட்டசபையில் ஒரே நேரத்தில் இரண்டு இரண்டு எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். வேகமாக பதவி ஏற்க வேண்டும் என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பதவி ஏற்கும் முறை பின்பற்றப்பட்டது. எப்போதும் எம்எல்ஏக்கள் தனித்தனியாகவே பதவி ஏற்பார்கள். மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக சட்டசபையில் இதுவரை 193 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் 28 எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேண்டும். உணவு இடைவேளைக்காக சட்டசபை கூட்டம் மதியம் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இடைவேளை விடப்பட்டு இருந்த கர்நாடக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது.
உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் பதவி ஏற்பு நடக்கும். அதன்பின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இடைப்பட்ட நேரத்தில் எம்எல்ஏக்களுடன் மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசாத வகையில், டிஜிபி பாதுகாப்பு அளிக்கப்படும்.
-
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை.. முதல்வர் விஜய் இப்போதாவது வாய் திறப்பாரா? பாய்ந்து வந்த கேஎன் நேரு -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தண்ணீருக்கு பதிலாக டீசல்.. மங்களூர் கிணற்றில் இரைக்க இரைக்க வந்த எரிபொருள்? கடைசியில் ட்விஸ்ட் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications