பராமரிப்பு பணிகளுக்கு பின்னர் கூடங்குளம் முதலாவது அணு உலை மீண்டும் இயங்கும்: மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை ஜனவரி மாதம் முதல் மீண்டும் இயக்கப்படும் என மத்திய அணுசக்தி துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணு உலை பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மின் உற்பத்தி 60 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக, அணு உலை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அறிவித்தப்படி 60 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

மேலும், கூடங்குளம் முதல் அலகில் மின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்நிலையில் மக்களவையில் இன்று நடைபெற்ற விவாத்தின்போது, கூடங்குளம் அணுஉலை தொடர்பாக அதிமுக உறுப்பினர் பி.ஆர் சுந்தரம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அணுசக்தி துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங், கூடங்குளம் முதலாவது அணு வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் அது மீண்டும் இயக்கப்படும் என்றார். மேலும், அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள இரண்டாம் அணு உலையிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications