காஷ்மீர் இந்துக்கள் பற்றிய படத்தை பார்ப்பதற்காக போலீசுக்கு லீவு விட்ட மத்திய பிரதேச அரசு

Subscribe to Oneindia Tamil

போபால்: தி காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்க செல்லும் போலீசாருக்கு விடுமுறை வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்து உள்ளது.

பிரபல இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நேற்று முந்தினம் நாடு முழுவதும் வெளியானது. இதில் விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி பாராட்டு

80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

மத்தியப்பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

மத்தியப்பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு


இந்த நிலையில் இப்படத்தை வெகுவாக பாராட்டி இருக்கும் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், படத்துக்கு மாநில அரசு வரி விலக்கு அளிக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தி காஷ்மீர் பைல்ஸ் உள்ளத்தை உலுக்கும் திரைப்படம். 90 களில் காஷ்மீரி இந்துக்கள் சந்தித்த வலியை, துயரத்தை, போராட்டத்தை, நிர்கதியை திரைக்கதையில் காட்டி இருக்கின்றனர். இந்த படத்தை ஏராளமான மக்கள் பார்க்க வேண்டும். அதற்காகவே திரைப்படத்துக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு வரி விலக்கு அளிக்க முடிவு செய்து இருக்கிறது." எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 போலீசாருக்கு விடுப்பு

போலீசாருக்கு விடுப்பு


இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, "மத்திய பிரதேச காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு அரசு விடுமுறை வழங்குகிறது.

ம.பி. நடிகருக்கு முக்கிய கதாபாத்திரம்

ம.பி. நடிகருக்கு முக்கிய கதாபாத்திரம்

மத்திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த ஒரு நடிகர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்க செல்லும் போலீசாருக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாநில காவல்துறை டிஜிபி சுதீஷ் சக்சேனாவிடம் தெரிவித்து இருக்கிறேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+