தொழிற் வளர்ச்சியில் உத்வேகம்! அசாமில் ரூ.18000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. அசத்தும் மோடி!
திஸ்பூர்: இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
பிரதமரின் பயண திட்டத்தின்படி, அவர் நேற்று மாலை 4 மணியளவில் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். இதனையடுத்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு தேசிய பூங்காவின் அஸ்ஸாம் போலீஸ் விருந்தினர் மாளிகையின் கோஹோராவில் பிரதமர் மோடி இரவு தங்கினார். இன்று காலை, பூங்காவிற்குள் சஃபாரி சென்றார்.

சஃபாரி முடித்து மதியம் 1:30 மணியளவில் ஜோர்ஹாட் திரும்பிய அவர், ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் 'லச்சித் போர்புகானின்' 84 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர் போதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, புதிதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். மேலும் சிவசாகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் ரூ.27000 கோடி மதிப்பில், டெஸ்லா நிறுவனத்திற்கு தேவையான செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று, கவுகாத்தி சுத்திகரிப்பு ஆலை மற்றும் டிக்பாய் சுத்திகரிப்பு ஆலைகளின் விரிவாக்கத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல பாரௌனியில் இருந்து கவுகாத்தி வரை செல்லும் ரூ.3,992 கோடி மதிப்பிலான பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களின் தொழிற் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications