For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமாரசாமி பதவியேற்பு.. ஜேடிஎஸ்ஸை ஆதரியுங்கள் என "பிரசாரம் செய்த" சந்திரசேகர ராவ் திடீர் புறக்கணிப்பு

குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் சந்திரசேகர ராவ் திடீரென புறக்கணிக்கிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி-வீடியோ

    பெங்களூர்: குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென புறக்கணிக்கிறார்.

    கர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அஸ்ஸாம் முத்லவர் பிரபுல்லா குமார் மஹான்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் அலுவலகம் கூறுகிறது

    முதல்வர் அலுவலகம் கூறுகிறது

    இந்நிலையில் இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. நவீனை பொருத்தவரை அவர் எந்த ஒரு பதவியேற்பு விழாவிலும் கலந்து கொள்வதில்லை என்று முதல்வர் அலுவலகம் கூறுகிறது.

    வாழ்த்து

    வாழ்த்து

    சந்திரசேகர ராவை பொருத்தவரை அவருக்கு முக்கியமான நிகழ்ச்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமையே வந்து குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    பாஜகவுக்கு எதிராக...

    பாஜகவுக்கு எதிராக...

    தேர்தல் நேரத்தில் கூட கர்நாடகத்தில் வாழும் தெலுங்கு பேசும் வாக்காளர்களை ஜேடிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கேசிஆர் வராதது பாஜகவுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளுக்கு வருத்தத்தை கொடுக்கும்.

    விரும்பவில்லை

    விரும்பவில்லை

    எதிர்க்கட்சிகளுடன் இருப்பது கேசிஆருக்கு ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள அவரு விரும்பவில்லை. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான் முக்கிய எதிர்க்கட்சியாகும். அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலால் காங்கிரஸுடன் இணைந்து விழாவில் கலந்து கொள்வதை அவர் விரும்பவில்லை.

    English summary
    The list of those attending the swearing-in-ceremony of H D Kumaraswamy is a star studded one. The Chief Ministers of Odisha and Telangana, Naveen Patnaik and K Chandrashekar Rao will however give the event a skip.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X