அங்கிள்னு சொன்னது ஒரு குத்தமா..? 2K கிட்ஸ் இளம்பெண்ணை அடித்து துவைத்த 80’ஸ் கிட்ஸ்..!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேட்மிட்டன் பேட்டை மாற்ற கடைக்குச் சென்ற இளம்பெண் அங்கிள் என அழைத்ததால் ஆத்திரத்தில் கடைக்காரர் இளம்பெண்ணை கொடூரமாகத் தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான சிதர்கஞ்ச் நகரைச் சேர்ந்தவர் 18 வயதான நிஷா அகமது. பேட்மிட்டன் வீராங்கனையான அவர் தினமும் வீட்டருகே உள்ள மைதானத்தில் பேட்மிட்டன் பயிற்சி எடுப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நிஷா அகமது பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது பேட் சேதமாகியுள்ளது. இதையடுத்து நிஷா அகமது தனது பேட்டை சரிசெய்ய அருகிலுள்ள கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது கடைக்காரரை பார்த்து அங்கிள் எனது பேட்டை சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என கேட்டுள்ளார்.
அங்கிள் என்ற வார்த்தையைக் கேட்டதும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கடைக்காரர், நிஷாவை கீழே தள்ளியதோடு கொடூரமாகத் தக்கியுள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தோர் நிஷாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிஷாவை தாக்கிய கடைக்காரரின் பெயர் மோஹித்குமார் என்பதும் , அவருக்கு வயது 35 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மோஹித் குமார் மீது ஐபிசி பிரிவு 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீற்றம் செய்தல்), பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications