பற்றி எரியும் மணிப்பூர்.. 45 நாட்களை கடந்த வன்முறை.. மேலும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் துண்டிப்பு
இம்பால்: மணிப்பூரில் 45 நாட்களை கடந்து வன்முறை நீடித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவை தடையானது வரும் 25 தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். இதுதான் கலவரத்திற்கு முக்கிய காரணமாகும். இப்படியாக கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய கலவரமானது தற்போது வரை 105 பேரை பலிவாங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
வன்முறையில் பாதிக்கப்பட்ட 47 ஆயிரம் பேர் 372 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை மணிப்பூர் மாநிலத்திலேயே நான்கு நாட்களாக முகாமிட்டார். மாநில டிஜிபி டோங்கலை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக ராஜீவ்சிங் நியமிக்கப்பட்டார். எனினும் மாநிலத்தில் வன்முறையின் தீவிரம் ஓயவில்லை. அமைதியை நிலை நாட்ட ஆளுநர் 'அனுசுயா உய்கே' தலைமையில் ஒரு குழுவை கடந்த 10ம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்தார்.
ஆனால், பிரபல நாடகக் கலைஞர் ரத்தன் தியாம், பிரபல நடிகரும் இயக்குநருமான மகோன்மணி மோங்சபா உள்ளிட்டோர் குழுவிலிருந்து விலகினர். அதேபோல குக்கி சமூகத்தினர், அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்கள் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று விலகிக்கொண்டது. கலவரம் தொடங்கி ஒன்னறை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையான 18ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 102வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, 1975 எமர்ஜென்சி குறித்தும், தற்போதைய பிபர்ஜாய் புயலை எதிர் கொண்டது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை.
எனவே ஆத்திரமடைந்த மக்கள் மன் கீ பாத் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறி ரேடியோக்களை ரோட்டில் போட்டு உடைத்தனர். பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது ஜூன் 25ம் தேதி வரை நீடிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில ஆணையர் ரஞ்சித் சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்,
"பிராட்பேண்ட், மொபைல் டேட்டா உள்ளிட்ட அனைத்து வகையான இன்டர்நெட் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைக்கு சில விதி விலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் தற்போது நடைபெற்று வரும் கலவரம் தொடர்பான தவறான வதந்திகள் அதிகம் பரப்பப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் இன்டர்நெட் சேவைக்கான தடை ஜூன் 25ம் தேதி மாலை 3 மணி வரை நீடிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications