மருந்து உற்பத்திக்கான மையமாக மாறும் உத்தரப் பிரதேசம்! குவியும் முதலீடுகள்.. அசரடித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசம் விரைவில் மருந்து உற்பத்திக்கான மையமாக மாறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு உ.பி முன்னுதாரணமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் முக்கியமான திட்டம்தான் மருத்துவ மைய திட்டம்.

இந்த திட்டத்தின்படி உத்தரப் பிரதேசம் விரைவில் மருந்து உற்பத்திக்கான மையமாக மாறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் மருத்துவ சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின்படி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 46 மாவட்டங்களில் உள்ள 81 மருத்துவமனைகளுக்கு தேசிய தர சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக திறன் பெற்ற பிறப்பு உதவியாளர்களை அரசு அதிக அளவில் நியமித்து வருகிறது. தற்போது ஒரு லட்சம் பிரசவங்களில் 167 பேர் வரை உயிரிழக்கின்றனர். இந்த விகிதம் வரும் 2030ம் ஆண்டுக்குள் 70ஆக குறைக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறோம். மேலும் முக்கியமான மருந்துகள் தயாரிக்கும் ஆலைகள் உத்தரப் பிரதேசத்தில் செயல்பட இருக்கின்றன. இப்படியாக உத்தரப் பிரதேசம் விரைவில் மருந்து உற்பத்திக்கான மையமாக மாற்றம் பெறும்" என்று கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications