மாங்கல்யம் தந்துனானே.. 2017ம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் நுழைந்த 10 பிரபல இந்திய ஜோடிகள்
2017ம் ஆண்டு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட பிரபல இந்திய ஜோடிகளின் பட்டியல் குறித்த செய்திதான் இது.
Recommended Video

டெல்லி : 2017ம் ஆண்டு பலருக்கும் பல வகையிலும் சிறப்பாக அமைந்திட்ட வேளையில், இந்த ஆண்டு திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைந்த 10 பிரபல ஜோடிகள் யார் யார் என்பதை பார்ப்போம்.
பிரம்மாண்டமான, அமைதியான, அழகான இந்த ஜோடிகளின் திருமணம் எதோ ஒரு வகையில் இந்திய மக்கள் பலரையும் பேச வைத்தது. அப்படி நாட்டு மக்கள் ஆர்வமாக பேசிய 10 திருமண விழா பற்றிய ஒரு தொகுப்பை பாருங்கள்.
முதலில் விருக்ஷா ஜோடியில் இருந்து இதை ஆரம்பிக்கலாம்.

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி - பாலிவுட் திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி பல ஆண்டுகளாக நிகழ்த்தி வந்த காதல் கண்ணாம்மூச்சி விளையாட்டை இந்த ஆண்டு திருமணத்தில் முடித்துக்கொண்டது. இந்தியாவில் இருந்து இத்தாலி சென்று தங்களது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது. கடைசி வரையில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் முக்கிய ஜோடி இவர்கள் இருவரும்.

ஜாஹிர் கான் - சகாரிகா காட்கே
இந்த ஆண்டு காதல் டூ கல்யாணம் வரை சென்றதில் அடுத்த முக்கியமான ஜோடி இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஜாஹிர் கான் - திரைப்பட நடிகை சகாரிகா காட்கே. இவர் சக்தே இந்தியா திரைப்படத்தில் நடித்தவர். பல ஆண்டுகளாக காதலித்து வந்தாலும், வீட்டின் எதிர்ப்பு காரணமாக கடந்த நவம்பர் 23ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டது இந்த ஜோடி.

ரூனிட் பிஸ்வாஸ் - கவிதா கவுசிக்
சந்திரமுகி சவுதாலா என்கிற சீரியல் கதாப்பாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான கவிதா கவுசிக் தனது காதலர் ரூனிட் பிஸ்வாஸை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கரம் பிடித்தார். இதற்கு சீரியல் நட்சத்திரங்கள் உட்பட, பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

நாக சைதன்யா - சமந்தா
விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு அடுத்தபடியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணம் தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா மற்றும் திரைப்பட நடிகை சமந்தா திருமணம் தான். இந்த திருமணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து திருமண சடங்குகள் முடிவுற்றது வரை வெளியான புகைப்படங்கள் அனைத்தையும் ட்ரெண்டாக்கி இந்த ஜோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் நெட்டிசன்கள். இருப்பினும் சமந்தாவுக்கு சீக்கிரம் திருமணம் ஆனதில் பலருக்கும் வருத்தம் தான் பாஸ் !

நீல் நிதின் முகேஷ் - ருக்மிணி சாஹே
இந்த பட்டியலில் இடம்பிடித்த முதல் காதல் திருமணம் அல்லாது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. நடிகர் நீல் நிதின் முகேஷை கரம் பிடித்தார் ருக்மிணி சாஹே. உதய்பூரில் பிப்ரவரி 9ம் தேதி திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

ஹர்ஷ் லிம்பாச்யா - பார்தி சிங்
காமெடி நடிகையான பார்தி சிங் தனது நீண்ட நாள் காதலரான எழுத்தாலர் ஹர்ஷ் லிம்பாச்யாவை இந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி கோவாவில் கரம் பிடித்தார். கோவா கடற்கரையில் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பாலிவுட் தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் திரண்டு வந்து வாழ்த்தியதில் திருமண ஜோடியே திக்குமுக்காடிப் போனது.

ப்ரெண்ட் கோபல் - ஆஷ்கா கோராடியா
இந்தி நடிகை ஆஷ்கா கோராடியா தனது அமெரிக்க காதலர் ப்ரெண்ட் கோபலை டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் திருமணம் செய்து கொண்டார். என்னடா இரண்டு முறை என்று யோசிக்கிறீர்களா ? டிசம்பர் 2ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், 3ம் தேதி இந்து முறைப்படியும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.

வட்சால் சேத் - இஷிதா தத்தா
தங்களது காதலையும், திருமணத்தையும் இந்த ஜோடி மிகவும் ரகசியமாக வைத்திருந்தது. ரகசியம் என்றால் எந்த அளவுக்கு என்று கேட்கிறீர்களா? தங்களது பெற்றோர், நண்பர்கள் என அனைவருக்குமே இவர்கள் திருமணம் செய்து கொள்ள போகும் விஷயம் திருமண நாள் அன்று காலையில் தான் அறிவித்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த ஜோடி கடந்த 29ம் தேதி மும்பையில் திருமணம் செய்து கொண்டது.

அஃப்தாப் சிவ்தாசானி - நின் டூசன்ஜ்
பாலிவுட் நடிகர் அஃதாப் சிவ்தாசானி தனது இலங்கை மனைவியான நின் டூசன்ஜை செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதில் விஷேசம் என்னவென்றால், இந்த ஜோடி தங்களது திருமணத்தை 2014ம் ஆண்டே பதிவு செய்துவிட்டது. இத்தனை நாட்கள் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவிட்டு இப்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

ஆனந்த் திவாரி - ஹர்ஷிதா பட்
பாலிவுட் நடிகை ஹர்ஷிதா பட் இந்த ஆண்டு தனது காதலரும், ஐக்கிய நாடுகளின் சபைக்கான அரசியல் ஆலோசகருமான ஆனந்த் திவாரியை மார்ச் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு காரணங்களால் இந்த திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகே தகவல் வெளியானது. அந்த அளவிற்கு சீக்ரெட் திருமணம் இது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications