பைவ் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் இல்லைங்க... மற்ற கைதிகளை போல்தான் சசிகலாவும்... தினகரன்
சிறையில் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஏதுமில்லை என்று நடிகர் கமல்ஹாசனுக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூர்: சிறையில் சசிகலா மற்ற கைதிகளை போல் தான் உள்ளார் என்றும் அவருக்கு சிறையில் பைவ் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் இல்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை எடப்பாடி அணியினர் ஓரங்கட்டிவிட்டனர். அவருக்கு எதிரான கருத்துகளை அமைச்சர் ஜெயக்குமார் அள்ளி வீசிவருகிறார். இது குறித்து ஆலோசனை நடத்த சசிகலாவை கடந்த சில நாள்களுக்கு முன்பு, அதாவது திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவுடன் முதல் முறையாக சந்தித்து பேசினார்.

60 நாள்கள் காலக்கெடு
அப்போது கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சசிகலா தினகரனுக்கு 60 நாள் கால அவகாசம் வழங்கியதாக தெரிகிறது. அதன்படி அந்த அவகாசம் வரும் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ரூபா வெளிப்படுத்தியதன் பின்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் மாற்றம்
அதிகாரிகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து சிறையில் அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர். கடந்த 20-ஆம் தேதி சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் சென்றிருந்தார். ஆனால் அவர் நேரம் தவறி வந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மீண்டும் சந்திப்பு
இந்நிலையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது தினகரன் கூறுகையில், யாருக்கு எப்போது எந்த ஆபரேசன் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆபரேசன் செய்யும் போது அதை செய்வேன்.

எந்த சலுகையும் இல்லை
சசிகலாவிற்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. ஒன்றரை மணிநேரம் காத்திருந்தே சசிகலாவை சந்தித்தேன். மற்றவர்கள் சொல்வது போல் உள்ளே பைவ் ஸ்டார் ஹோட்டல் எதுவுமில்லை. பள்ளிக்காலத்தில் இருந்தே நான் கமல் ரசிகன். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்றார்.

கமல் கிண்டல்
கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நமிதாவிடம் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்று அவரிடம் கமல் கேட்டார். அதற்கு அவர் பிக்பாஸ் வீடு ஒரு ஃவைவ் ஸ்டார் ஜெயில் என்றார். அதற்கு பதிலளித்த கமல் இது ஜெயில் இல்லை... ஆனால் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications