For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை- ஒ.என்.ஜி.சி இயக்குநர் பேட்டி

ஒ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை அதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நெடுவாசலில் ஹைட்ரோ காப்ர்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் 17ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என ஒ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்றும் மத்திய அரசு அத்திட்டத்தை கைவிட வேண்டும் என 17ஆவது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்.

There is no ill-effect in the hydro carbon plan - ONGC director Divethi.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி, ''ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. காரணம் இது மரபு சார்ந்த உற்பத்தி.

மரபு சாராத ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில்தான் பிரச்சனைகள் எழக்கூடும். ஆனால் மரபுசார்ந்த முறையில் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் முறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்துக்கு இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

மேலும், எண்ணெய் மற்று எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, அதன் இறக்குமதியை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை. ஹைட்ரோ-கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. ஹைட்ரோகார்பன் வாயு எடுப்பதால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லை. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை பற்றி கவலை வேண்டாம் என்றார் திவேதி.

ஆனால், கடலில் எண்ணைய் கொட்டினால் அதை எடுக்க முறையான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால், பிளாஸ்டிக் வாளியில் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

English summary
There is no ill-effect in the hydro carbon plan and ground water won't be affected said ONGC director Divethi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X