1940களில் நாடாளுமன்ற வளாக பலகைகளில் இந்தியே இல்லை!

1940களில் நாடாளுமன்ற வளாக பலகைகளில் இந்தியே இல்லை என மூத்த வழக்கறிஞர் கேஎஸ் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிலும் இந்திதான் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்தியைத் தொடர்ந்து சமஸ்கிருதமும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 1940களில் நாடாளுமன்ற பெயர் பலகைகளில் ஆங்கிலம், உருது மொழிகள்தான் இடம் பெற்றிருந்தன என்பதை வெளிப்படுத்தும் புகைப்படத்துடன் கூடிய பதிவை மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அப்போது மாட்டு வண்டிகளில் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாம்.

மத்திய அரசு இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதும் பணியில் ஈடுபட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்புகள் பெயர் பலகைகளை கறுப்பு மையால் அழித்தன. இதேபோல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் 1940களில் நாடாளுமன்ற பெயர் பலகையில் கூட இந்தி இல்லை என மூத்த வழக்கறிஞர் கேஎஸ் ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணனின் பதிவு:

கே.எஸ். ராதாகிருஷ்ணனின் பதிவு:

சமீபத்தில் டெல்லியில், இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் நடந்த கருத்தரங்கிற்கு சென்றபோது நாடாளுமன்றத்தின் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஓய்வுபெற்ற பேராசிரியர் நண்பர் கோயல் காட்டினார். அந்த புகைப்படத்தில் ஆங்கிலத்திலும், உருது மொழியில் எழுதப்பட்ட பலகையில் ‘நாடாளுமன்ற வளாகத்தில் மாட்டு வண்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது' என உள்ளது.

நடந்து வாருங்கள்

நடந்து வாருங்கள்

அதாவது, 1940களில் என்றால் 70 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் மாட்டு வண்டியில் வராமல் நடந்து வாருங்கள். இந்திய மக்கள் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. எனவே அவருடைய பிரதிநிதிகளான நீங்களும் சிறிது தூரம் நடந்து வந்து நேர்மையாக உண்மையாக மக்கள் பணியாற்றுங்கள் என்பது தான் இதிலிருக்கும் உள்ளார்ந்த அர்த்தம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

கார் கேரேஜில் தங்கியதாக

கார் கேரேஜில் தங்கியதாக

அன்று நாடாளுமன்றத்திற்கு குற்றவாளிகளும், மக்கள் விரோத சக்திகளும் மக்களின் பிரதிநிதிகளாக செல்லவில்லை, அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியமும், சலுகைளும் இந்தளவு கிடையாது. மறைந்த முன்னாள் அமைச்சர் சி. சுப்ரமணியம் தன்னுடைய நினைவுகளில் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக சென்றபோது கார் கேரேஜில் தங்கியதாக எழுதியுள்ளார் என்று என்னுடைய நினைவு. அப்போது மாநில அரசுகளின் இல்லங்களோ, விடுதிகளோ, பவன்களோ கட்டப்படாத காலகட்டம். ஒரு சில எம்.பிக்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆரம்ப கட்டத்தில் விருந்தினராக தங்கியதாக சொல்வார்கள்.

துணிகளை தானே சலவை செய்து

துணிகளை தானே சலவை செய்து

உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 2 கிலோமீட்டர்கள் நடந்தே தான் செல்லவேண்டும். இயலவில்லை என்றால் மாட்டு வண்டியில் சென்றால் சன்சத் மார்க், ரெட் கிராஸ் ரோடு, தல்கோத்ரா ரோடு, பண்டிட் பந்த் மார்க், சர்ச் ரோடு மட்டுமே மாட்டு வண்டியில் செல்ல முடியும். தங்களுடைய துணிகளை தாங்களே சலவை செய்து கொள்வதுண்டு.

மெட்ராஸ் ஹோட்டல்

மெட்ராஸ் ஹோட்டல்

அன்றைய சென்னை ராஜதாணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கன்னாட்டு பிளேசில் உள்ள மெட்ராஸ் ஹோட்டலில் தான் உணவுக்கு செல்வது வாடிக்கை. இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, மலையாள உறுப்பினர்கள் விரும்பி சாப்பிடும் சோறு, இட்லி, தோசை முதலானவைகள் கிடைக்கும். இது தற்போதுள்ள சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி பேப்பர் கடைக்கு அருகிலும் அதன் மாடியிலும் இருந்தது. சூடான சாம்பாரில் இட்லியை போட்டு உண்பது இங்கு வாடிக்கை. இதை வடஇந்தியர்கள் கூட விரும்பி சாப்பிடுவது உண்டு. சுதந்திரா கட்சியின் எம்.பிக்களாக இருந்த கரூர் முத்துசாமி கவுண்டர், சிவகாசித் தொகுதியின் முளிச்செவல் பி. இராமமூர்த்தி ஆகியோர் டெல்லிக்கு சென்றபோது இந்த காட்சிகளை கண்டதும் உண்டு.

மனசாட்சிக்கு அஞ்சி மக்கள் பணி

மனசாட்சிக்கு அஞ்சி மக்கள் பணி

அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதயசுத்தியோடு மனசாட்சிக்கு அஞ்சி மக்கள் பணியாற்றினார்கள். இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சுயபுகழ்ச்சிக்கும், தன்னலத்தினை தங்களுடைய இதயத்தினில் சுமந்து கடுமையான பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+