சிங்கப்பூரில் இருந்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 8 பேர் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் கைது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சிங்கப்பூரில் இருந்து ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த 8 பேர் திருவனந்தபுர விமான நிலையத்தில் சிக்கினர்.
சிங்கப்பூரில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று அதிகாலை வந்திறங்கியது.
அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மதுரையைச் சேர்ந்த 8 பேர் 1 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேலாகும்.












Click it and Unblock the Notifications