For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“யுவராஜின் விலை” ஏழு கோடி ரூபாய்- விற்க மறுத்த உரிமையாளர்!

Google Oneindia Tamil News

ஹரியானா: உத்தரப் பிரதேசத்தில் ஒரு எருமை மாட்டிற்கு 7 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டும் அதன் உரிமையாளர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் 7 கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது.

இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

This 1,400kg bull is a cash cow; owner turns down Rs 7 crore offers

14 அடி நீள எருமை:

முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது.

"பலே" எருமை யுவராஜ்:

யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி வரை செறிவாக்கம் செய்யப்படுகிறது. 0.25 மில்லி கொண்ட ஒரு குப்பி விந்தணு ரூபாய் 1500 க்கு விற்கப்படுகிறது.

வருஷத்துக்கு 50 லட்சம்:

அந்த வகையில் யுவராஜ் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது. முர்ரா வகை எருமைகள் சராசரியாக நாளொன்றுக்கு 25 லிட்டர் வரை பால் கொடுக்கிறது.

வாரிசுகளின் பலம்:

அதுவும் யுவராஜின் வாரிசுகள் அதிக வீரியமிக்கவையாக உள்ளதால் 25 லிட்டரையும் தாண்டி பால் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் யுவராஜுக்கு அவ்வளவு கிராக்கியாம்.

English summary
A big crowd of gawkers has gathered around Yuvraj, a giant 1400kg Murrah bull that on Friday was crowned champion at Meerut's All India Cattle Show by a 10-member jury, startled as much by the animal's size as by his owner's refusal to sell it for a mind-boggling Rs 7 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X